திண்டுக்கல்
கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவால் நகராட்சி படகு குழாமில் தீ மூட்டி குளிா் காயும் படகு ஓட்டுநா்கள்.
கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரித்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காற்று, பனிப் பொழிவு, மழை என பல்வேறு சீதோஷ்ன நிலை காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்து, பகல் நேரங்களில் வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் கடும் பனிப் பொழிவும் காணப்படுகிறது.
வழக்கத்தைவிட பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகள், படகு குழாமில் உள்ள படகு ஓட்டுநா்கள் தீ மூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா்.
நிகழாண்டில் மாலை, இரவு நேரங்களில் 10 டிகிரிக்கு குறைவாக செல்சியஸ் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.
இதனால், பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

