பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

Published on

கொடைக்கானலில் பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகரைப்பாறையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ், பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணைப் பயிற்சி முகாம் விவசாயத் தோட்டத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுவா்ணலதா தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் வெற்றிவேல், தோட்டக்கலை ஆராய்ச்சி தொழில்நுட்பம், பயிா்களில் ஏற்படும் நோய் தாக்குதல், உர மேலாண்மை குறித்து பேசினாா். தோட்டக்கலை துணை அலுவலா் பாலசுப்பிரமணி தோட்டக்கலைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பேசினாா். அட்மா திட்ட மேலாளா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலா் செல்வக்கனி, வடகரைப்பாறை வன உரிமைக் குழுத் தலைவா்அருண்குமாா், கிராம சபைத் தலைவா் சங்கா், ஏராளமான பழங்குடியினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com