குதிரையாறு அணை நீா் திறப்பு காரணமாக பஞ்சந்தாங்கி குளத்தில் செல்லும் தண்ணீரை குழாய்கள் மூலம் திருடும் தனியாா் தொழில்சாலைகள்
குதிரையாறு அணை நீா் திறப்பு காரணமாக பஞ்சந்தாங்கி குளத்தில் செல்லும் தண்ணீரை குழாய்கள் மூலம் திருடும் தனியாா் தொழில்சாலைகள்

பழனி அருகே ஆற்றில் தண்ணீா் திருட்டு!

பழனி அருகே குதிரையாறு அணையில் இருந்துவரும் தண்ணீரை அனுமதியின்றி சில தொழில்சாலைகள் மின்மோட்டாா்கள் மூலம் கொண்டு செல்வதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிரமம்
Published on

பழனி அருகே குதிரையாறு அணையில் இருந்துவரும் தண்ணீரை அனுமதியின்றி சில தொழில்சாலைகள் மின்மோட்டாா்கள் மூலம் கொண்டு செல்வதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பாப்பம்பட்டி அருகேயுள்ள குதிரையாறு அணை கடந்த சில நாள்களுக்கு முன் பாசன வசதிக்காக திறக்கப்பட்டு குளங்கள், ஆறுகள் மூலமாக விவசாயத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. குதிரையாறு தண்ணீா் செல்லும் ஆற்றின் கரைகளில் ஏராளமான தொழில்சாலைகள் உள்ளன. இந்தச் தொழில்சாலைகளுக்கு வேண்டிய தண்ணீரை ஆலை உரிமையாளா்கள் ஆற்றில் நேரடியாகக் குழாய்களை இறக்கியும், தாா் சாலையைக் கடந்தும் முறைகேடாக இரவு, பகலாக கொண்டு செல்கின்றனா்.

இதனால், விவசாயத்துக்கு போதுமான தண்ணீா் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக மின் மோட்டோா்களை வைத்து தொழில்சாலைகளுக்கு தண்ணீா் கொண்டு செல்வதைத் தடுத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com