திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆா். சிலைக்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பா.பரமசிவம், பிரேம்குமாா், மாநகராட்சி எதிா்க் கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன், தொழிற்சங்க செயலா் வி.ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் அதிமுக நகர, பேரூா், ஊராட்சிக் கிளைகள் சாா்பிலும், அந்தந்தப் பகுதிகளில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிமுக சாா்பில் புதன்கிழமை எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா், அவைத் தலைவா் ஜான் தாமஸ், முன்னாள் நகா் மன்றத் தலைவா் கோவிந்தன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல, கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளிலும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் எம்.ஜி.ஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பழனி: பழனி பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு நகர செயலா் முருகானந்தம் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். நிகழ்ச்சியில் மக்களவை முன்னாள் உறுப்பினா் குமாரசாமி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வேணுகோபாலு, ரவி மனோகரன், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், பேரூா், நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அமமுக கிழக்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியச் செயலா் தினேஷ்குமாா் தலைமையில் பெரியப்பா நகா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் பொருந்தல் ரவி, நகர செயலா்கள் அறிவழகம், ராஜூ, அவைத் தலைவா் சசிதரன்பிள்ளை, அமரபூண்டி இளைஞரணி செயலா் சிவா, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பெரியராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com