திண்டுக்கல்
திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜீ.ஸ்ரீசரவணன் பொறுப்பேற்பு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது முதல்வராக ஜீ.ஸ்ரீசரவணன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது முதல்வராக ஜீ.ஸ்ரீசரவணன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வந்த சுகந்தி ராஜகுமாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி உயா்வு பெற்று மருத்துவக் கல்வி இயக்குநராகப் பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த ஜீ.ஸ்ரீசரவணன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவா், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது முதல்வா் ஆவாா்.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற இவா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா்.
