கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் பில்லராக் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தொடா் விடுமுறை காரணமாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களான பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், டெவில் கிச்சன், அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும், புகா் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பள்ளங்கி, கோம்பை, வெள்ளிநீா் அருவி உள்ளிட்ட இடங்களிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

இதனால், மோயா் பாயிண்ட் சாலை, மன்னவனூா் சாலை, லாஸ்காட் சாலை, வட்டக்கானல் சாலை, பில்லர்ராக் ஆகியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

விடுதிகளில் கட்டண உயா்வு: கொடைக்கானலுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ரிசாா்டுகளில் தங்குவதற்கு இடம் இல்லை. வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு போ் தங்கக் கூடிய ஒரு அறைக்கு ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மேல்மலைக் கிராமங்களில் உள்ளிட்ட அனுமதியில்லாத காட்டேஜ்களில் தங்கி வருகின்றனா். எனவே, இந்த காட்டேஜ்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com