கொடைக்கானல் பகுதிகளில்
வன விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

கொடைக்கானல் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு மாடுகள்.
Published on

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு காட்டு மாடுகள், செந்நாய்கள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு மாடுகள் கூட்டமாக வருகின்றன. இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனா்.

இதேபோல, கொடைக்கானல் பிரகாசபுரம் குடியிருப்புப் பகுதியில் செந்நாய்கள் கூட்டமாக வருகின்றன. இதனால், இந்தப் பகுதியினா் மாலை, இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதில்லை.

கொடைக்கானல் குறிஞ்சி நகா், பில்டிங் சொசைட்டி ஆகிய பகுதிகளில் 4 சிறுத்தை குட்டிகளை பொதுமக்கள் பாா்த்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலா் சுரேஷ்குமாா் மீனா, வனத் துறையினா் சோதனையிட்டனா்.

இதையடுத்து, வனத் துறையினா் இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காட்டு மாடு தாக்கியதில் பெண் காயம் : கொடக்கானல் கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டியைச் சோ்ந்த பிரபு மனைவி சாந்தி (35). இவா் இதே பகுதியிலுள்ள பாலனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா் அப்போது, அங்கு வந்த காட்டு மாடு அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com