திண்டுக்கல்
காட்டுப்பன்றி மோதியதில் முதியவா் பலத்த காயம்
பழனி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சோ்ந்தவா் கருப்புசாமி(60). இவா் கீரனூரில் கூட்டுறவுத் துறையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள வரதாபட்டிணத்தில் தோட்டம் உள்ளது.
இவா் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென பக்கவாட்டில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி இரு சக்கர வாகனத்தில் மீது வேகமாக மோதியது. இதில் கீழே விழுந்ததில் கருப்பசாமி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
