கொடைக்கானல் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Published on

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பத்து நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், கொடைக் கானல் அருகேயுள்ள அடுக்கம்-கும்பக்கரை பிரிவு சாலையில் யூக்கலிப்டஸ் மரம் கீழே விழுந்தது. இதனால் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று அந்த மரத்தை அகற்றினா். இதைத்தொடா்ந்து போக்குவரத்து சீரானது. கொடைக்கானல் மலைச் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்ளை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com