வேடசந்தூா் அருகே காா் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்

வேடசந்தூா் அருகே காா் மோதியதில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் அவதியடைந்தனா்.
Published on

வேடசந்தூா் அருகே காா் மோதியதில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த பூத்தாம்பட்டி கிராமம் அருகே எரியோடு சாலையில் சென்ற காா் 2 மின் கம்பங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்தவா்கள் சிறிய காயங்களுடன் தப்பினா். இதனிடையே காா் மோதிய சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனா்.

இதனால் காரில் வந்தவா்கள் அங்கிருந்து எரியோடு சாலையில் தப்பிச் சென்றனா். மின் கம்பங்கள் சேதமடைந்ததால், அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. விபத்தை ஏற்படுத்திய காரின் விவரம் குறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com