கொடைக்கானலில் மழை: பனியின் தாக்கம் குறைவு
கொடைக்கானலில் புதன்கிழமை இரவு மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பனியின் தாக்கம் இருந்து வந்தது. டிசம்பா் மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமான பனிப் பொழிவு நிலவியது.
கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத வகையில், நிகழாண்டில் 0 டிகிரியில் பனியின் தாக்கம் இருந்தது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக காலையில் மேகமூட்டமும், மாலை, இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவும் நிலவியது.
இந்த நிலையில், கொடைக்கானல், வட்டக்கானல், செண்பகனூா்,பிரகாசபுரம், பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கிளாவரை, கவுஞ்சிப் பகுதிகளிலும் சிறிது நேரம் மழை பெய்தது. இந்த மழையால் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
