திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி காமராஜா் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கான குறிப்பாணை (நோட்டீஸ்) சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு விநியோகிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது. ஏ பகுதியில் 12 கடைகள், பி பகுதியில் 12 கடைகள் என மொத்தம் 24 கடைகளும், பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள நடைபாதைகளின் மேற்கூரைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.
எனவே, இந்தக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் புதிதாக நவீன வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளதால், கடைகளை காலி செய்து 30 நாள்களுக்குள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வியாபாரிகள் அதிருப்தி: இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது: கடைகளின் முன் பகுதியிலுள்ள சாளர மேற்கூரை மட்டுமே சேதமடைந்துள்ளன. கடைகளின் கட்டுமானத்தில் எந்த விரிசலும், சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும், கட்டுமானம் சேதமடைந்திருப்பதாகக் கூறி, காலி செய்ய அறிவுறுத்தி குறிப்பாணை விநியோகிக்கப்படுகிறது.
கட்டுமானம் குறித்து பொதுப் பணித் துறையிடமிருந்து உறுதிச் சான்று பெற்ாகத் தெரியவில்லை. கட்டடம் கட்டுவதற்கான நிதி ஆதாரம் குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, பொது ஏலம், வாடகை, குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், 24 கடைகளை இடித்தால் உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே பூச் சந்தை வணிக வளாகத்தை இடிப்பதற்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது. அந்த இடத்திலேயே முழுமையாக பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த 24 கடைகளின் முன்பாக உள்ள சாளர மேற்கூரைகளை மட்டும் சீரமைத்தாலே போதுமானதாக இருக்கும். இங்குள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு: ஏ, பி,. பகுதியிலுள்ள 24 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.3 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
திண்டுக்கல்-பழனி புறவழிச் சாலை அருகே புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காமராஜா் பேருந்து நிலையத்திலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் அவசரம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை என்றனா்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

தரைக்கடை வியாபாரிகள் மீது நகராட்சி கடை வியாபாரிகள் புகாா்

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


