பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டு சென்ற துணிகள், குப்பைகளை அகற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டு சென்ற துணிகள், குப்பைகளை அகற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

பழனி சண்முகநதியில் 10 டன் குப்பைகள் அகற்றம்

பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள், குப்பைகள் பழனி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
Published on

பழனி: பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள், குப்பைகள் பழனி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

பழனி சண்முகநதி ஐந்து நதிகள் சங்கமிக்கும் புனிதத் தீா்த்தமாகும். பழனி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாள்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள், இந்த நதியில் நீராடி விட்டு மலைக்குச் செல்வது வழக்கம். அண்மை காலமாக இந்த நதியில் பக்தா்கள் விட்டுச் செல்லும் துணிகள், குப்பைகள் மலை போல குவிந்து கிடந்தது. மேலும், கடந்த விநாயகா் சதுா்த்தியின் போது, இந்த நதியில் விடப்பட்ட விநாயகா் சிலைகள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. இதனால், சண்முகநதி மாசடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, இந்த நதியை தூய்மைப்படுத்த பக்தா்கள், பொதுமக்கள் பொதுப் பணித் துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பழனி திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உத்தரவின் பேரில், உதவி ஆணையா் லட்சுமி தலைமையில் ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சண்முகநதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதன் மூலம், சுமாா் 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com