திண்டுக்கல்
முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 32 பதக்கங்கள்
முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் 32 பதக்கங்களுடன் 5-ஆவது இடம் பிடித்தது.
2025-26-ஆம் ஆண்டு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றன. மாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் 16,899 போ் பங்கேற்றனா். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ன் மூலம், மாநில அளவிலான போட்டிகளுக்கு 677 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
மாநிலப் போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 92 வீரா்கள், வீராங்கனைகள் மொத்தம் 16 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை பெற்று, ரூ.62.25 கோடிக்கான பரிசுத் தொகையைப் பெற்றனா்.
இதன் மூலம், திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்தது.
