கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்களில் படா்ந்துள்ள பனித் துளிகள்.
திண்டுக்கல்
கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் அக்டோபா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, நவம்பரில் பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
இரவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் செடிகள், மலா்கள், புற்களிலும் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன. இந்தப் பனியால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

