திண்டுக்கல்
இளைஞா் தற்கொலை
பழனி சண்முகநதி அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முகநதி புறவழிச்சாலை அருகே சின்னாற்றங்கரையில் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பழனி நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
