திண்டுக்கல்
கிரேன் வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கிரேன் வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள குமாா்பாளையத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள் (80). இவா் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம்-செம்பட்டி சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற கிரேன் வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைத்த மூக்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
