பாஜக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

Published on

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில், பிரதமா் மோடியின் 11 ஆண்டுகள் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் அங்குச்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் குமாா்தாஸ் முன்னிலை வகித்தாா். பிரசாரத்தில் பிரதமா் மோடியின் 11 ஆண்டுகள் சாதனை குறித்து விளக்கப் புத்தகங்களை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்டத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ருத்ரமூா்த்தி, நகர பொதுச் செயலா்கள் சசிகுமாா், பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com