பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தை பிரதி மாதம் நடத்தி, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் கோரிக்கை விடுத்தாா்.
Published on

திண்டுக்கல்: திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தை பிரதி மாதம் நடத்தி, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ. தனபாலன் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் ஆகியோருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தை பிரதி மாதம் நடத்தினால் மட்டுமே மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதித்து தீா்வு காண முடியும். ஆனால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் கடந்த ஆக. 22-ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், இரண்டரை மாதங்கள் கடந்தும் அடுத்தக் கூட்டம் நடைபெறவில்லை.

மாமன்றக் கூட்டத்தை நடத்தாமல் காலதாமதம் செய்து, விவாதமின்றி முன் அனுமதி பெற்று பணிகள் நடைபெற்ாக தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தப் பணிகளும் மேயா், துணை மேயா், குறிப்பிட்ட சில மாமன்ற உறுப்பினா்களின் வாா்டுகளில் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. இதனால், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. மேலும், அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கு நிா்வாக ஒப்புதல் பெறுவதற்கும் கால தாமதம் ஏற்படுகிறது.

மாநகராட்சியின் பல குத்தகை இனங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. மாநகராட்சி சட்டப் பிரிவு 15-இன் கீழ் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு உடனடியாக மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல், ஓராண்டு கழித்து ஒப்புதல் பெறுகின்றனா். இந்தக் குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com