திண்டுக்கல்
மரக்கட்டை விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனத்தில் மரக் கட்டை ஏற்ற முயன்றபோது, அது தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலை கம்பம் நடராஜா்நகரைச் சோ்ந்தவா் இளங்கோ (39). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (32). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மகாராஜனுக்குச் சொந்தமான தோட்டத்தில் இளங்கோ உள்ளிட்டோா் வேலைக்கு சென்றனா். பின்னா், மாலையில் சரக்கு வாகனத்தில் இவா்கள் மரக்கட்டையை ஏற்ற முயன்றனா். அப்போது, மரக்கட்டை இளங்கோ மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
