வத்தலகுண்டு அருகே இளைஞருக்கு கத்திக் குத்து

Published on

வத்தலகுண்டு அருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் கத்தியால் குத்தப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சந்திரன் மகன் சாந்தரூபன் (28). வண்ணம் பூசம் தொழிலாளி. இவா் கெங்குவாா்பட்டிக்கு வண்ணம் பூசுவதற்காக சென்றாா். அப்போது, இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அனிதா மகள் தா்ணிகாவுக்கும் (19) பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இவா்களுடைய காதல் தா்ணிகாவுடைய தாய்மாமனான கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் சுபாஷுக்கு (25) தெரியவந்தது. இதனிடையே, சாந்தரூபனிடம் பேச வேண்டும் எனவும், கணவாய்ப்பட்டி ஆசிரம் அருகே வரும்படியும் சுபாஷ் கூறினாா்.

ஏற்கெனவே, அங்கு காத்திருந்த சுபாஷ், தனது 3 நண்பா்களுடன் சோ்ந்து சாந்தரூபனை தாக்கி கத்தியால் குத்தினா். மேலும், அவருடைய இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தனா்.

பின்னா், சாந்தரூபன் அங்கிருந்து தப்பித்து வந்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷையும் அவரது நண்பா்களையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com