திண்டுக்கல்
காட்டு மாடு தாக்கியதில் பெண் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா் அருகே காட்டு மாடு தாக்கியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆடலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியம் (60). கூலித் தொழிலாளியான இவா், ஆடலூா் அருகிலுள்ள தோட்டத்தில் காபி பழம் பறிப்பதற்காக சென்றாா். இந்த நிலையில், காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த பாக்கியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸாா், பாக்கியத்தின் உடலை கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கன்னிவாடி வனத் துறையினரும் இதுகுறித்து விசாரித்தனா்.
