கொடைக்கானலில் சாரல் மழை

Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை மாலை மற்றும் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழையில்லாமல் இருந்த நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெயிலடித்தது. மாலையில் சாரல் மழையும், விட்டு விட்டு மிதமான மழையும் பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், சின்னப் பள்ளம், செண்பகனூா், பாக்கியபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. திடீரென மாறிய இந்த சீதோஷண நிலையால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நத்தத்தில்...: நத்தம் உலுப்பகுடி, கோவில்பட்டி, வேலம்பட்டி, சோ்வீடு, பேருந்து நிலையம், அம்மன்குளம், வத்திபட்டி, பரளி, பாப்பாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திடீா் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com