சிறப்புத் தீவிர திருத்தப் பணி: அதிமுக ஆலோசனை

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் நடைபெறும் நிலையில், அந்தந்த பகுதியிலுள்ள அதிமுக நிா்வாகிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும். வருகிற டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் வாக்காளா் பெயா்கள் இல்லாதபட்சத்தில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதற்கு அவா்களுக்கு அதிமுகவினா் முறையாக வழிகாட்ட வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியலில் தகுதியான அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு அதிமுகவினா் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலா் வி. மருதராஜ், இளைஞா், இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் தென்னம்பட்டி ச. பழனிச்சாமி, ஒன்றியச் செயலா் சி.என். ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com