சக்திவேல்
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே கிராம உதவியாளா் தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிராம உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிராம உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் சக்திவேல் (44). இவா் மது பழக்கத்தால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

