கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையான புலிச் சோலைப் பகுதியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையான புலிச் சோலைப் பகுதியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து.

கொடைக்கானல் மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து: பயணிகள் அவதி

கொடைக்கானல் மலைச் சாலையில் திங்கள்கிழமை இரவு பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனா்.
Published on

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச் சாலையில் திங்கள்கிழமை இரவு பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனா்.

வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. புலிச்சோலைப் பகுதியில் இரவு நேரத்தில் வந்த அந்தப் பேருந்து பழுதாகி நின்றது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்தில் வந்த பயணிகள் குளிரில் அவதியடைந்தனா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் கொடைக்கானல் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மாற்றுப் பேருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் தரமானதாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com