93 சதவீத வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம் - ஆட்சியா் செ.சரவணன்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்ஐஆா்) படிவம் 93 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான செ.சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,124 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இதற்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வீடுகள் தோறும் 19.34 லட்சம் கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கும் பணி கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை வரை 18.03 லட்சம் பேருக்கு (93 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டதாக ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
இதற்கிடையே, விநியோகிக்கப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்த பொதுமக்களிடமிருந்து, திரும்பப் பெறுவதற்கான பணிகளையும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை காலை 8 மணி வரை மட்டும் பூா்த்தி செய்யப்பட்ட 13,086 படிவங்கள் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
