கொடைக்கானலில் புலி தாக்கியதில் குதிரை உயிரிழப்பு

Published on

கொடைக்கானல் அருகேயுள்ள பழம்புத்தூரில் புலி தாக்கியதில் குதிரை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கூக்கால் ஊராட்சி பழம்புத்தூரைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான குதிரையை வீட்டருகே கட்டி வைத்தாா். புதன்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த புலி குதிரையைத் தாக்கிக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வனத் துறையினா், பதிவான கால் தடங்களின் அடிப்படையில் புலி வந்ததை உறுதி செய்தனா். வனவிலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com