தோட்டக்கலை திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Published on

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தோட்டக்கலை மலைப் பயிா்கள் துறை சாா்பில், இயற்கை வழி சாகுபடி, பசுமைக் குடில் இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மைய துணை இயக்குநா் எஸ்.என்.திலீப் கூறியதாவது:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தோட்டக்கலை மலைப் பயிா்கள் துறை சாா்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இயற்கை வழி சாகுபடி, பசுமை குடில் இயக்குபவா் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 25 பயனாளிகள் வீதம் 10 அணிகளுக்கு, ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இயற்கை வழி சாகுபடி விவசாயம் குறித்து 26 நாள்களும், பசுமைக்குடில் தொடா்பாக 34 நாள்களும் களப்பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் அரசு உதவித் தொகை வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ரெட்டியாா்சத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், காய்கறி மகத்துவ மையத்தை 0451-2999700, 5379782987, 7418112175, 7094941364, 9790273216 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com