திண்டுக்கல்
மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காப்பிலியபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (46).
கட்டத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியாா் கட்டடத்தில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் மின்தூக்கி (லிப்ட்) இயக்கும் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராமல் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 3-ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
