கால்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணியினா்.
கால்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்த மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணியினா்.

மாநில கால்பந்து போட்டியில் மதுரை அணி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது.
Published on

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது.

திண்டுக்கல் மாவட்டக் கால்பந்து கழகம், புனித மரியன்னை முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில், 12 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டிக்கு, மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணியும், கோவை பயோனியா் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியும் தகுதி பெற்றன.

இதில் மதுரை அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணி 3-ஆம் இடத்தையும், சேலம் கிலேசி புரூக் அகாதெமி அணி 4-ஆம் இடத்தையும் பிடித்தன.

இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்டக் கால்பந்துக் கழகத் தலைவா் சுந்தரராஜன், செயலா் சண்முகம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அதிபா் மரிவளன், தாளாளா் மரியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொணடு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com