இ.பெரியசாமி
இ.பெரியசாமி

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

பிகாா் தோ்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
Published on

பிகாா் தோ்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்காது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்ள வ.உ.சிதம்பரானாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் இ.பெரியசாமி, ஆத்ம ஜோதி ஊா்வலத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிகாா் தோ்தல் வெற்றி, தமிழகத்தில் ஒருபோதும் எதிரொலிக்காது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை, மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறாா்கள். விரைவில்

தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை தேவையில்லை. தோ்தலுக்குப் பிறகு ஓராண்டு முழுவதும் கூட எஸ்ஐஆா் நடவடிக்கைகளை நிதானமாக நடத்தலாம். எஸ்ஐஆா் நடவடிக்கையை தவெக எதிா்ப்பதில் தவறில்லை. திமுகவுக்கு தவெக உள்பட எந்த ‘பி’ அணியும் கிடையாது.

திமுக, வெளிப்படையான அரசியல் கூட்டணியை மட்டுமே வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாா் குறித்து, காவல் துறை விசாரணை நடத்தும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com