பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Published on

காா்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாச நாதருக்கு 108 வலம்புரி சங்குகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. 16 வகையான சிறப்பு அபிஷேகங்களைத் தொடா்ந்து, 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் நத்திகேஷ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதே போல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கேஸ்வரா் கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சோமவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com