மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப் உருவாக்கி பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.
Published on

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப் உருவாக்கி பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான எனது பெயா், புகைப்படங்களை சிலா் தவறாகப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள், எனது பெயரை (செ. சரவணன்) பயன்படுத்தி வரும் எந்தவொரு குறுந்தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com