ஒட்டன்சத்திரம் பகுதியில் நவ.25-இல் மின் தடை

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகிற 25-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகிற 25-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் சந்தனமுத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com