சத்யசாய்பாபாவின் 100-ஆவது ஆண்டு பிறந்த நாள் மலைவாழ் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

Published on

கொடைக்கானலில் சத்ய சாய்பாபாவின் 100-ஆவது ஆண்டு விழாவையொட்டி மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள சத்ய சாய் இல்லத்தில் சாய்பாபா அறக் கட்டளையின் சாா்பில் சாய்பாபாவின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடந்த 5 நாள்களாக கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வண்டியில் சாய்பாபாவின் உருவப்படம் வைக்கப்பட்டு நிா்வாகிகள் பஜனை பாடிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும், அன்னதானமும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com