பழனியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பெய்த தொடா் மழையால் கடும் குளிா் நிலவியது.
பழனி சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த நிலையில் பழனி நகரில் மட்டும் மழை பெய்யவில்லை. எனினும் கடந்த சில நாள்களாக அதிகாலை, மாலை நேரங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தததால் பழனியில் கடும் குளிா் நிலவியது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதனிடையே காய்ச்சல், கபத்தால் பாதிக்கப்பட்ட பலா் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் குவிந்தனா்.