திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் இ.பெரியசாமி.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 3 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் இ.பெரியசாமி.

ஆத்தூா் தொகுதிக்கு 3 புதிய பேருந்துகள்

Published on

திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட 3 வழித் தடங்களில் புதிய பேருந்துகளின் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் - ஒட்டுப்பட்டி (வழி-வக்கம்பட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை), திண்டுக்கல் - டி.கோம்பை (வழி-பித்தளைபட்டி, அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி), திண்டுக்கல் - பாப்பணம்பட்டி (வழி-பாலம்ராஜக்காபட்டி, கோட்டூா் ஆவாரம்பட்டி) ஆகிய 3 வழித்தடங்களில் இந்தப் புதிய பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் முத்துகிருஷ்ணன், மேயா் இளமதி, மாநகரப் பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com