அக்.14, 15-இல் மாணவா்களுக்கு பேச்சாற்றால், படைப்பாற்றல் போட்டிகள்

Published on

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு படைப்பாற்றல், பேச்சாற்றல் குறித்த போட்டிகள் வருகிற14, 15-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சாற்றல், படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு மாவட்டவாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 14-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 15-ஆம் தேதியும், திண்டுக்கல் எம்எஸ்பி பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளன.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், படிவத்தைப் பூா்த்தி செய்து முதல்வா் அல்லது தலைமையாசிரியா் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன், போட்டி தொடங்குவதற்கு முன்பாக தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் தலா ஒருவா் வீதம் மொத்தம் 3 மாணவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னா் அறிவிக்கப்படும். முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ஆவது பரிசு ரூ.5ஆயிரம் என மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1.32 லட்சம் வழங்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com