கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம்
கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம்

அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக் கோரி சுற்றுலாத் துறை அலுவலகம் முன் பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் பொதுமக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக் கோரி சுற்றுலாத் துறை அலுவலகம் முன் பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் பொதுமக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அஞ்சுவீடு அருவிக்கு சமீப காலங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 15-க்கும் மேற்பட்டவா்கள் நீரில் மூழ்கி இறந்தனா்.

அஞ்சுவீடு அருவியில் பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த அருவியைப் பாதுகாப்பான இடமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கொடைக்கானல் பி.டி.சாலையிலுள்ள சுற்றுலாத் துறை அலுவலகம் முன் பல்வேறு அரசியல் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகளும் பொதுமக்களும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டம் நடத்தியவா்களிடம் சுற்றலாத் துறை உதவி அலுவலா் சுதா, உதவி வட்டாட்சியா் ஜெயராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா், காவல்துறை உதவி ஆய்வாளா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com