பழனியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ஜோஷ்வா, செயலா் அல்தாப் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பழனி: பழனியில் இந்திய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ஜோஷ்வா தலைமை வகித்தாா். செயலா் அல்தாப் ரஹ்மான் வாழ்த்திப் பேசினாா்.
தேனி மாவட்டத் தலைவா் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், பூரண மது விலக்கு என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து பழனி நகா், ஒன்றியப் பகுதியில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

