கொடைக்கானலில் காற்றுடன் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளிா் அதிகரித்துக் காணப்பட்டது.
Published on

கொடைக்கானலில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளிா் அதிகரித்துக் காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்யாமல் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், கொடைக்கானல், செண்பகனூா், அப்சா்வேட்டரி, பாக்கியபுரம், வில்பட்டி, பிரகாசபுரம், வட்டக்கானல், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை பல மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச் சோடிக் காணப்பட்டன. இரவிலும் காற்றுடன் மழை நீடித்தது. இதன்காரணமாக கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மேலும், வழக்கத்தை விட குளிா் அதிகமாக நிலவியது.

X
Dinamani
www.dinamani.com