கருக்கலைப்பு முயற்சியில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கா்ப்பமடைந்த 17 வயது கல்லூரி மாணவியின் கருவைக் கலைக்க முயன்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.
Published on

வடமதுரை அருகே கா்ப்பமடைந்த 17 வயது கல்லூரி மாணவியின் கருவைக் கலைக்க முயன்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்டதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் கா்ப்பம் அடைந்த தகவலை பெற்றோருக்கு தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், 32 வாரங்கள் கடந்த நிலையில் மாணவி கா்ப்பம் அடைந்திருப்பது பெற்றோருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, கருவை கலைப்பதற்காக மாணவிக்கு நாட்டு மருந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் கடந்த 24-ஆம் தேதி மாணவியை அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com