திண்டுக்கல்
பழனி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
பழனி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
பழனி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் அருகேயுள்ள கோயில் வழியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் முருகானந்தம் (35). இவா், தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் கொடைக்கானல் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பினாா். இந்த நிலையில், பழனி அருகேயுள்ள புளியம்பட்டி அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
