கேரளத்தைச் சோ்ந்தவா் விடுதியில் மரணம்

பழனி அடிவாரம் தனியாா் விடுதியில் இறந்து கிடந்தவரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
Published on

பழனி அடிவாரம் தனியாா் விடுதியில் இறந்து கிடந்தவரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விடுதியில் புதன்கிழமை பிற்பகல் கேரள மாநிலம், எா்ணாகுளத்தை சோ்ந்த வினீத் (45) என்பவா் அறை எடுத்து தங்கினாா். வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாத நிலையில், விடுதி மேலாளா் பழனி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அறையைத் திறந்து பாா்த்த போது படுக்கையில் வினீத் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த அறையில் மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, அவரது உடலை போலீஸாா் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இவா் அதிகமாக குடித்ததன் காரணமாக இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com