திண்டுக்கல்
சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா்  உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், கிளாங்குண்டலை அடுத்துள்ள ராமபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டிக்கு வந்து விட்டு, மீண்டும் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைத்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
