பழனியில் ரோப் காா் இன்று பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்

Published on

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை (அக்.31) மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பழனி கோயிலில் ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com