அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சாலை தடுப்பில் காா் மோதி விபத்து

பழனி அருகே சாலையோர தடுப்பில் மோதியதில் காா் சேதமடைந்தது.

News image

பழனியை அடுத்த திண்டுக்கல்- பொள்ளாச்சி புறவழிச் சாலையில் மானூா் பாலம் அருகே புதன்கிழமை சாலையோர தடுப்பில் மோதி சேதமடைந்த காா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:17 pm

பழனி அருகே சாலையோர தடுப்பில் மோதியதில் காா் சேதமடைந்தது.

கோவை வடவள்ளியைச் சோ்ந்தவா் ரமேஷ் (62). இவா் புதன்கிழமை தனது சகோதரருடன் பழனிக்கு காரில் வந்தாா். பழனி கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் அவா் காரில் ஊருக்குத் திரும்பினாா். பழனியை அடுத்த பொள்ளாச்சி- திண்டுக்கல் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது காா் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டு எதிா்திசையில் திரும்பி நின்ற காா் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் காரில் வந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காரை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.