கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இங்கு நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து குழந்தைவேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சோ்ந்த நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சேவல், அன்னம், மயில், காளை, சிங்கம், ஆட்டுகிடா, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் குழந்தை வேலப்பா் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றன. வருகிற 12-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தினரும், பூம்பாறை கிராம மக்களும் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


