தேரடி தெப்ப மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி.
தேரடி தெப்ப மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி.

பழனியில் தெப்பத் தேரோட்டத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு

பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வாக பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வாக பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, நாள்தேறும் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்தச் சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்கமயில் போன்ற வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருளினாா். கடந்த மாதம் 31-ஆம் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், கடந்த 1-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றன. நிறைவு நாள் நிகழ்வாக புதன்கிழமை பெரியநாயகியம்மன் கோயில் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, தெப்பத்தின் நடுவிலுள்ள கல் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற பொருள்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபசாரமும் நடைபெற்றன.

அப்போது, சுவாமிக்கு நகைகள், பட்டாடைகள், வண்ண மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பிறகு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி உலா வந்தாா். தெப்பக்குளத்தில் தீயணைப்புப் படை வீரா்கள் ரப்பா் படகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தெப்பத் தோ் நான்கு திசைகளுக்கும் வந்த போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணியளவில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com